கேரள முதல்வருக்கு எதிரான ஆதாரங்களை ஒப்படைத்த சரிதா

திருவனந்தபுரம்: சூரிய மின்தகடு முறைகேடு தொடர்பில் கேரள முதல் வர் உம்மன் சாண்டிக்கு எதிரான ஆதாரங்கள் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன. உம்மன் சாண்டி மீது குற்றம்சாட்டிய நடிகை சரிதா நாயர், இந்த ஆதா ரங்களை நேற்று முன்தினம் ஒப்ப டைத்தார். அந்த ஆதாரங்களில் பல ஒலி, காணொளி வடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. "இந்த முறைகேட்டில் தன்னைச் சிக்க வைக்க இடதுசாரிக் கட்சிகள் தம்முடன் பேரம் பேசியதாகவும் 10 கோடி ரூபாய் தருவதாகத் தெரிவித் தன என்றும் சரிதா முன்பு கூறினார். இப்போது இடதுசாரிக் கட்சிகள் தமக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிக்க வில்லை என்கிறார்.

"இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதே சரிதா கூறும் குற்றச்சாட்டுகள் எல்லாம் அடிப்படை இல்லாதவை என்பதை உறுதி செய் கிறது," என்றார் உம்மன் சாண்டி. இந்நிலையில் சரிதா நாயர் அளித் துள்ள 3 குறுந்தகடுகளில் அவர் கேரள காங்கிரசின் மூத்த தலைவர்களுடன் பேசிய உரையாடல்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களில் சிலர், "சூரிய மின் தகடு முறைகேட்டில் முதல்வர் உம்மன் சாண்டி பெயர் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்," என்று சரிதா விடம் கூறுவது இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சரிதா நாயரை அப்பிர முகர்கள் பலவிதமாக சமாதானம் செய்ய முயல்வது தொடர்பிலான உரையாடல்களும் குறுந்தகட்டில் உள்ளன. இதனால் கேரளாவில் காங் கிரஸ் அரசுக்கும் முதல்வர் உம்மன் சாண்டிக்கும் நெருக்கடி அதிகரித்துள் ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!