ஜீவா, ஹன்சிகா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'போக்கிரி ராஜா'. இதில் இன்னொரு நாயகனாக சிபிராஜ் நடிக்கிறார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இந்தப் படத்தில் முனிஸ்காந்த், மனோபாலா, மயில் சாமி, யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முதற்கட்டமாக புதுச்சேரியில் நடந்தது. அப்போது ரசிகர்க ளிடம் சிக்கிக்கொண்ட ஹன்சிகாவை ஜீவா, சிபிராஜ் இருவரும் சேர்ந்து மீட்டு அனுப்பி வைத்தனர். அந்த அனுபவத்தையே இப்படக்குழு வினர் இன்னும் மறக்காத நிலையில், மற்றொரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. தற்போது மகாபலிபுரத்தில் இப்படத் தின் இறுதிக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்புராயன் பயிற்சி அளிக்க ஜீவா, சிபிராஜ் இருவரும் மோதிக்கொள்வது போன்ற முக்கிய காட்சியைப் படமாக்கி உள்ளனர். இருவரும் தங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் போட்டி போட்டு நடித்துக்கொண்டிருந்த னராம். அப்போது ஒருவருடன் ஒருவர் மோதும்போது எதிர்பாராதவிதமாக ஒருவருக்கு அடி விழுந்திருக்கிறது. இதையடுத்து இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. வாக்குவாதம் முற்றியதால் ஜீவாவும் சிபியும் உண்மையாகவே மோதும் நிலை உருவானதாம். இதனால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டார் இயக்குநர். அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குநர், சண்டைப் பயிற்சியாளர், படக்குழுவினர் என அனைவருமாகச் சேர்ந்து இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயன்றனர். என்றாலும் வாக்கு வாதம் நீடித்திருக்கிறது. நீண்ட நேரப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு இருவரும் சமாதானம் ஆனார்கள். 'மச்சி' என்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டனர். அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.