டெங்கியைத் தடுக்க தொண்டர்கள் தேவை

டெங்கியைத் தடுக்க சிங்கப்பூரர்கள் பங்காற்றுவது அவசியம் என சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியிருக் கிறார். தெம்பனிஸ் வட்டாரத்தின் டெங்கி நிலவரத்தைப் பார்வையிட்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார். தெம்பனிஸ் பாலிவியூ வட்டா ரத்தில் கொசு இனப்பெருக்கம் செய்யும் 86 இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு மச கோஸ் தெரிவித்தார்.

"அவற்றில் 60 இடங்கள் வீடு களிலும், 19 இடங்கள் பொது இடங்களிலும், ஆறு இடங்கள் மற்ற இடங்களிலும், ஓர் இடம் கட்டுமானத் தளத்திலும் இருந் தன," என அவர் எழுதியிருந்தார். தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு மசகோஸ், தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகளுடன் தெம்ப னிஸ் பாலிவியூ வட்டாரத்தைப் பார்வையிடச் சென்றிருந்தார். டெங்கிப் பரவலால் ஆக அதிக மானோர் பாதிக்கப்பட்ட வட்டாரம் இது. வியாழக்கிழமை வரை 195 பேர் இங்கு டெங்கியால் பாதிக்கப் பட்டிருந்தனர்.

டெங்கி பற்றிய துண்டுப் பிரசுரங்களை தேசிய சுற்றுப்புற வாரியம் அவ்வப்போது வீடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

2016-01-09 06:00:16 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!