1எம்டிபி; முதல் நபரின் பெயர்

மலேசியாவின் 1எம்டிபி நிதி நிறுவனத்துக்குத் தொடர்புள்ள தாகக் கூறப்படும் வங்கிக் கணக்குகளை முடக்கி சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் முதல் நபரின் பெயர் வெளியாகியிருக் கிறது. அவர், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'பிஎஸ்ஐ சிங்கப்பூர்' என்ற தனியார் வங்கியின் மூத்த அதிகாரி யாக் இயூ சீ என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாரம் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு விசா ரணை நடைபெறுவதையும் உயர் நீதிமன்ற தகவல்கள் காட்டு கின்றன. 1எம்டிபி குளோபல் இன் வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட், ஆபார் இன்வெஸ்ட்மெண்ட் பிஜே எஸ் லிமிடெட், எஸ்ஆர்சி இன்டர் நேஷனல், லோ டாயிக் ஜோ ஆகியவற்றுக்கு அவர் வங்கி தொடர்பு அதிகாரியாக இருந் துள்ளார் என்று கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!