வாழ்க்கையைச் சீர்குலைக்கும் பதற்றமான மனநிலை

தீங்கு விளைவிக்கும், பாதகமான நிகழ்வுகள் நடந்துவிடும் என்று அடிக்கடி கவலைப்படுவது பதற்றமான மனநிலைக்குரிய அறிகுறிகளில் ஒன்று என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் பதற்றமான மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர் டாக்டர் பவன் சோனார் தெரிவித்துள்ளார். பெற்றோரின் எதிர்பார்ப்புகள், நண்பர் களிடையே போட்டி, அதிகப் போட்டித்தன்மை கொண்ட சமூகம், பரபரப்பான வாழ்க்கைமுறை போன்றவற்றால் தங்களை அறியாமல் பலர் பதற்றமான மனநிலைக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.

"பதற்றமான மனநிலை எனும் மனநோயால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ச்சியான, தேவையில்லாத கவலைகளால் அவுதி யுறுகின்றனர். இப்பிரச்சினையால் பாதிக்கப் படுபவர்கள் சிறு விஷயங்களைப் பற்றிக் கூட அதிக அளவில் கவலைப்படுவர். "கவலைப்படத் தேவையில்லாதபோதும்கூட ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களை ஆட்டிப்படைக்கும். சிலரால் அவர்களது எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது. தேவையில்லாமல் கவலைப்படுகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டாலும் அவர்களால் அந்த எண்ணங்களை அவர்களது மனத்திலிருந்து நீக்க முடியாது. "இந்த நோய் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. கல்வி, விளை யாட்டுகள் போன்ற துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டே ஆக வேண்டும் என்ற மனப்போக்கு அவற்றில் ஒன்றாகும். "தமது தோற்றம், பேசும் விதம், தேர்வில் பெறும் மதிப்பெண்கள், சமூகம் தம்மைப் பற்றி கொண்டிருக்கும் கருத்து முதலியவற்றால் இவர்கள் அதிகம் கவலைப்படுவதும் உண்டு," என்று உளவியல் நிபுணர் சீமா ஹிங்கோரானி தெரிவித்தார். படம்: தகவல் சாதனம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!