காணாமல்போன பெண் இணையத்தில் சந்தித்த காதலரைத் தேடிச் சென்றார்

காணாமல் போனதாகக் கூறப்பட்ட சிங்கப்பூரரான 25 வயது பெண், இணையத்தில் சந்தித்த காதலரைத் தேடி ருமேனியா நாட்டுக்குச் சென்றதாகக் கூறி யிருக்கிறார். நிர்வாக உதவியாளரான செரில் யாப் லே லெங்கும் அவரது தாயார் ஃபூ லி கெங்கும், 61, காணாமல் போனதாக பெண்ணின் தந்தை புகார் கூறியிருந்தார். ஆனால் ஜனவரி 22ஆம் தேதி இருவரும் ருமேனியாவின் தலை நகர் புக்காரெஸ்டுக்கு சென்றனர். டாக்சி ஓட்டுநரான திரு யாப், 59, தமக்குத் தெரியாமல் இருவரும் சிங்கப்பூரிலிருந்து வெளியேறி யிருப்பதால் யாராவது அவர்களை ஏமாற்றியிருக்கலாம் என்றும் ‌ஷின் மின் நாளேடுக்கு அளித்த பேட்டி யில் கவலை தெரிவித்தார். ஆனால் 'புரோ டிவி' என்ற ருமேனியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தானும் தனது தாயும் காதலரின் வீட்டில் வசித்து வருவதாக செல்வி யாப் கூறினார்.

புக்காரெஸ்ட்டிலிருந்து 150 கி. மீட்டர் தொலைவில் உள்ள வல்டு ரெஸ்டி என்ற கிராமத்தில் அலெக் சாண்ட்ரு டோனியா என்ற காதல ருடனும் அவரது பெற்றோருடனும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். செய்தியாளர் ஒருவர், 'ஏன் ருமேனியாவுக்கு வந்தீர்கள்' என்று கேட்டதற்கு, "யு டியூப்பில் ஒன்றாக வேலை செய்வதற்காக காதலரைச் சந்திக்க வந்தேன்," என்றார் அவர். தொலைக்காட்சி செய்தியில் காதலரும் அவரது பெற்றோரும் காட்டப்பட்டனர்.

'புரோடிவி' ருமேனியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காதலர் அலெக்சாண்ட்ரு டோனியாவுடன் செல்வி செரில் யாப் லே லெங் (நடுவில்), அவரது தாயார் ஃபூ லி கெங். படம்: புரோடிவி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!