சிவப்பு அல்லது பச்சை; புதிய பொதுப் பேருந்துகளின் நிறத்தைத் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் வாக்களிக்கலாம்

பளபளப்பான சிவப்பு நிறமா அல் லது எலுமிச்சையின் பச்சை நிறமா?

அரசாங்கக் குத்தகையின்கீழ் செயல்படவிருக்கும் புதிய பேருந்து களின் நிறத்தைத் தேர்ந்தெடுக்க பயணிகள் வாக்களிக்கலாம். பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் நிறத்திலான பேருந்துகளை ஆங்கிலோ-ஆஸ்திரேலிய டவர் டிரான்சிட் நிறுவனம் பயன்படுத்தும்.

இவ்வாண்டு இரண்டாம் காலாண் டிலிருந்து, சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தில் இந்நிறுவனத்தின் பேருந்து சேவை தொடங்கப்படும். மூன்றாம் காலாண்டில் இருந்து பாசிர் ரிஸ், பொங்கோல் வட்டாரங் களில் பேருந்து சேவைகளைத் தொடங்கவிருக்கும் 'கோ-அஹெட்' எனும் பிரிட்டிஷ் நிறுவனமும் இதே நிறத்தைப் பயன்படுத்தும்.

‚பேருந்து சேவையை குத்தகை முறையில் நடத்தும் மாற்றத்துடன், பொதுப் பேருந்துகள் அனைத்தும் படிப்படியாக அரசாங்கத்திற்குச் சொந்தமாகும். "பொதுவான பணிச் சின்னம் நமது சிங்கப்பூர் பேருந்துக்குச் சீரான, தனித்துவ அடையளத்தை உருவாக்கும்," என நிலப் போக்கு வரத்து ஆணையம் நேற்று கூறி யது. பொதுப் பேருந்துகள் அனைத் திலும் ‚'எஸ்ஜி பேருந்து' என்ற சின்னமும், ‚'ஒன்றுசேர்ந்து முன்னேறிச் செல்கிறோம்' என்ற முழக்கவரியும் இடம்பெறும்.

ஜூ கூன் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தில் நேற்று சிவப்பு, பச்சை வண்ணங்களிலான பேருந்துகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந் தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!