அனைத்துப் பிரிவுகளிலும் சிஓஇ கட்டணம் குறைந்தது

நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று நடத்திய வாகனங்க ளுக்கான வாகன உரிமைச் சான் றிதழ்களுக்கான ஏலக் குத்தகை யில் அனைத்துப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் குறைந்துள் ளன. 'ஏ' பிரிவு அதாவது 1,600 சிசிக்குக் குறைவான கார்களுக் கான 'சிஓஇ' கட்டணம் $51,301ல் இருந்து $46,651க்குக் குறைந் தது. பெரிய கார்களுக்கான 'பி' பிரிவின் 'சிஓஇ' கட்டணம் $50,089லிருந்து $11,479 சரிந்து $38,610 ஆனது.

பொதுப் பிரிவு வாகனங்களுக் கான சான்றிதழ் கட்டணம் $51,000லிருந்து குறைந்து $44,001 ஆனது. மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் ஆகக் குறைவான தொகையான $9 குறைந்தது. அது முன்னைய கட்டணமான $6,512லிருந்து சரிந்து $6,503 ஆனது. சரக்கு வாகனங்கள், பேருந்து கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வர்த்தக வாகனங்களுக்கான 'சிஓஇ' கட்டணம் $46,502ல் இருந்து குறைந்து $45,036 ஆனது. 3,614 வாகன உரிமைச் சான்றி தழ்களுக்கு மொத்தம் 6,286 விண்ணப்பங்கள் கிடைத்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!