அதிமுகவினருக்கு தேர்வாணைய பதவிகள்: திமுக, பாமக வழக்கு

சென்னை: தமிழக அரசுத் தேர்வாணைய உறுப்பினர்களாக அதிமுக அனுதாபிகளை அரசு நியமித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இதையடுத்து, அரசு நியமனத் திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக, திமுக சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசியல் சாசன சட்டத்தின்படி அரசுத் தேர்வாணையம் என்பது அரசிய லுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகச் செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். "ஆனால், தமிழக அரசு பரிந்துரையின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்வா ணைய உறுப்பினர்களாக 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பதவி யில் நியமிக்கப்படுபவர்கள் 6 ஆண்டுகளுக்கு எந்தக் குறுக் கீடும் இல்லாமல் பதவி வகிக் கலாம். இப்பதவியில் நியமிப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசியல் சார்பின்றி வெளிப் படையான பல்வேறு சிறப்பு தகுதி களை பெற்றிருக்க வேண்டும்," என பாலு தமது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

தேர்வாணையத்தின் செயல் பாடுகள் குறித்து அறியாதவர்களையும் சிறிதும் அனுபவம் இல்லாத இளம் வயதினரையும் உறுப்பினர்களாக நியமித்துள்ள தாக குற்றம்சாட்டியுள்ள அவர், புதிய உறுப்பினர்களில் பலர் அதிமுக அனுதாபிகளாகவும் அதிமுக வழக்கறிஞர் அணியில் உள்ளவர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். "மேலும் இவர்கள் அனைவரும் ஒரே குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பெண்கள் ஒருவர் கூட இப்பதவியில் அமர்த்தப் படவில்லை. தேர்வாணைய வரலாற்றிலேயே இப்போதுதான் இத்துறைக்கு சம்பந்தமே இல்லா தவர்கள் அதிகமாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

இந்த தேர்வின் மூலம் அதிமுக அரசு தனது பத வியை தவறாக பயன்படுத்தி உள்ளது," என பாலு மேலும் குற்றம்சாட்டி உள்ளார். அதிமுகவினரான நவநீத கிருஷ்ணன், நட்ராஜ் போன்றவர் கள் அரசு தேர்வாணையத் தலை வர்களாக நியமிக்கப்பட்டு, அதன் பிறகு இப்போது அதிமுகவில் அங்கம் வகிக்கின்றனர் என்று கூறியுள்ள அவர், புதிதாக நியமிக் கப்பட்ட 11 பேரின் நியமனத்தையும் ரத்து செய்து உத்தரவிட வேண் டும் என தமது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வரவுள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!