சென்னை: தமிழக அரசு ஏழை மாணவ, மாணவியரின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் செயல்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரம் மோசமாகி வருவ தாக கவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்ட முறைகள் தொடர்ந் தால், தமிழக மாணவ, மாணவி யரின் முழுத் திறமையும் வெளிப் படாது என்று குறிப்பிட்டுள்ள அவர், உலக தரத்துக்கும், தேசிய கல்வி திட்டத்துக்கும் இணை யான பாடத் திட்டத்தை மாநில பள்ளிக் கல்வித்துறை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
"மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் குழுமம், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 7 ஆயிரத்து 216 பள்ளிகளில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 416 மாணவ, மாணவியரிடம் ஆய்வு நடத்தி அண்மையில் அறிக்கை வெளியிட்டது. இந்த ஆய்வு, தமிழகத்தில் 280 பள்ளிகளில் நடந்தது. "இந்த ஆய்வு முடிவுகளில், தமிழகத்தில் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பாடத் திட்டங் கள் அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை. தமிழ கத்தின் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவியரின் தேர்ச்சி விழுக்கா டானது ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் மிகக் குறை வாக உள்ளதென்றும் தேர்ச்சி விகிதத்தில் இந்திய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி மிக மிகக் குறைவாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது," என விஜய காந்த் சுட்டிக்காட்டி உள்ளார்.