சென்னை: சட்டப்பேரவைத் தேர் தலை மனதிற்கொண்டு வாக்கா ளர்களுக்குப் பணம் கொடுக்க அதிமுக முயற்சி மேற்கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை யில், சிறு வணிகர்களுக்கான கடன் என்ற பெயரில் அதிமுகவினர் பணம் விநியோகிப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். "தமிழகத்தில் சிறு வணிகர் களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை வாரம் ரூ.200 வீதம் திருப்பிச் செலுத்துமாறும் கூறப்பட்டது. தொடக்கத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் பின்னர் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
"இந்நிலையில் சிறு வணிகர் அல்லாதவர்களுக்கும் இந்தக் கடனை வழங்க அதிமுகவினர் நிர்ப்பந்தித்து வருகின்றனர். சிறு வணிகர் கடன் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுகவினர் முயற் சித்து வருகின்றனர்," என்று ராம கிருஷ்ணன் கூறியுள்ளார். தற்போது தகுதி இல்லாதவர் களுக்கும் கடன் வழங்க வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை அதிமுகவினர் நிர்பந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தகுதி உள்ள சிறு வணிகர்களுக்கு மட் டும் கடன் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண் டும் என மேலும் வலியுறுத்தி உள்ளார்.