தமிழில் சாதிக்க விரும்பும் ரன்யா ராவ்

கர்நாடகாவின் குடகில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார் ரன்யா ராவ். 'வாகா' படத்தில் விக்ரம் பிரபுவை இவர்தான் காதலிக்கப் போகிறாராம். "பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே குடகு பகுதியில்தான். பெங்களூரில் சில காலம் படித்தேன். அதன் பிறகு மும்பையில் நடிப்புப் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. "ஏற்கெனவே இந்தியா முழுவதும் ஒருமுறை வலம் வந்திருக்கிறேன். கடைசியாக வந்து நிற்கும் இடம்தான் சென்னை," என்கிறார் ரன்யா ராவ். முதல் படத்திலேயே கன்னட முன்னணி நடிகர் சுதீப்பின் ஜோடியாக நடித்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?''

"ஆகா... அதை வாழ்நாள் முழுவதுமே மறக்க இயலாது. அவ்வளவு அற்புதமான அனுபவம். தெலுங்கில் வெற்றிபெற்ற 'மிர்ச்சி' படத்தின் மறுபதிப்புதான் 'மாணிக்யா'. சுதீப் சார், ரவிச்சந்திரன் சார், ரம்யா கிருஷ்ணன் மேடம் என்று பெரிய பெரிய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை அப்படியொரு வாய்ப்பைக் கொடுத்து கடவுள் என்னை ஆசீர்வதித்ததாகவே கருதுகிறேன். நடிப்பில் எப்படி இவ்வளவு ஆர்வம்?

"சின்னக் குழந்தையாக இருக்கும்போதே பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். அதிலும் நாடகம் போடுவதாக இருந்தால் அதில் நடிக்க நான்தான் முதல் ஆளாகப் போய் வரிசையில் நிற்பேனாம். "ஆனால் எங்கள் வீட்டைப் பொறுத்தவரையில் பெற்றோருக்கு நான் திரையுலகிற்கு வந்ததில் விருப்பம் இல்லை. அதேசமயம் என் ஆர்வத்தைக் கண்டு அதற்கு தடைபோடவும் தயங்கினர். அதன் பிறகு நடிக்க அனுமதித்த இருவரும், கண்டிப்பாக இளங்கலை பட்டப்படிப்பாவது முடிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!