இந்திய ஹாக்கி அணித் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்திய ஹாக்கி அணித் தலைவர் சர்தார் சிங், 29 (படம்), தம்மைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பிரிட்டிஷ் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 'மனரீதியாக, உடல்ரீதியாக, உணர்வுரீதியாக' சர்தார் சிங் தம்மைத் துன்புறுத்தினார் என்று அந்த 21 வயதுப் பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கின் போது தாங்கள் இருவரும் சந்தித் ததாகவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தங்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், 2015ஆம் ஆண்டில் சர்தார் சிங் தம்மை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாக வும் அவர் கூறியிருப்பது இந்திய ஹாக்கி வட்டாரத்தைத் திடுக்கிடச் செய்துள்ளது. எழுத்துமூலம் புகார் அளிக்கப் பட்டிருந்தாலும் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் படவில்லை என்றார் பஞ்சாப் மாநிலம், லூதியானா போலிஸ் ஆணையர் பி எஸ் உம்ராநங்கல். மேலும், புகார் குறித்து விசாரணை நடந்துவருவதாகவும் அவர் சொன்னார். "கருக்கலைப்பு செய்தபின் சர்தார் என்னைப் புறக்கணித்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளவும் மறுத்து வருகிறார்," என்று அந்தப் பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்ணுடன் தமக்குத் திருமணம் நிச்சயிக்கப்படவில்லை என்று மறுப்புத் தெரிவித்திருக்கும் சர்தார் சிங், அதே வேளையில் அப்பெண் ணுடனான உறவு குறித்து வாய் திறக்கவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!