‘ரூனியின் வேட்டை தொடரும்’

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனியின் கோல் வேட்டை தொடரும் என அக்குழு நிர்வாகி லூயி வேன் ஹால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஸ்டோக் சிட்டி குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத் தில் ஜெசே லிங்கார்ட், ஆன்டனி மார்ஷல், ரூனி ஆகியோர் கோல் அடிக்க, 3=0 என்ற கணக்கில் வென்றது மேன்யூ.

போட்டிக்குப் பின் செய்தியாளர் களிடம் பேசியபோது, "ரூனி கோல் அடித்ததில் மகிழ்ச்சி. இது அவருக்கும் நல்லது; குழுவிற்கும் நல்லது. ஏனெனில், அவர் கோல் போடும் ஆட்டங்களில் எல்லாம் குழுவும் வெற்றி பெறுகிறது," என்றார் வேன் ஹால். லிவர்பூல் குழுவை 2-=0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 50 புள்ளிகளுடன் பட்டியலில் தனது முதல் நிலையை வலுப்படுத்திக் கொண்டது லெஸ்டர் சிட்டி. இந்தப் பருவத்தில் புதிய காற் பந்துப் புயலாக உருவெடுத்து வரும் ஜேமி வார்டி, 60வது, 71வது நிமிடங்களில் லெஸ்டருக்காக இரு கோல்களைப் புகுத்தினார். இவற்றுடன் நடப்பு லீக்கில் அவரது கோல் எண்ணிக்கை 18 ஆனது.

ஸ்டோக் சிட்டிக்கு எதிராக கோலடித்த மகிழ்ச்சியில் மேன்யூ ஆட்டக்காரர் வெய்ன் ரூனி. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!