நீதிமன்றத்தின் தமிழ்ப் பெயரில் பிழை என வழக்கு

'மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை கிளை' என்னும் தமிழாக்கத்தில் பிழைகள் இருப்பதாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பெயர் 'மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை நீள் இருக்கை' என்று இருக்க வேண்டும் என தமிழ் தாங்கிச் சங்கத்தைச் சேர்ந்த சோலை சுப்பிரமணியன் என்பவர் மனுச் செய்துள்ளார். எந்த நீதிமன்றத்தின் பெயர் பிழையாக உள்ளது என்று அவர் கூறுகிறாரோ அதே நீதிமன்றத் தில் இவ்வழக்கு போடப்பட்டுள்ளது. 'ஹைகோர்ட் பெஞ்ச்' என்னும் ஆங்கிலச் சொற்களில் 'பெஞ்ச்' என்பது 'பிராஞ்ச்' என் பதற்கு இணையாக 'கிளை' என தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்றும் உயர் நீதிமன்றம் என்பதில் 'ம்' இருக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், 'மதுரை கிளை' இடையே 'க்' விடுபட்டுள்ளது என்பதும் அவ ரது வாதம். எனவே, இலக்கணச் சுத்தப்படி 'மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை நீள் இருக்கை' என்று பெயரை மாற்ற உத்தரவிடக் கோரியுள் ளார் அவர். மனுவை ஏற்ற நீதிமன்றம் விசாரணைக்குத் தேதி குறிப்பிடவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!