ரம்பா: என் திருமண வாழ்வில் எந்தப் பிரச்சினையும் இல்லை

தனது குடும்ப வாழ்வில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை ரம்பா. தனது கணவர் இந்திரன் பத்மநாதன், 2 மகள்களுடன் அவர் கனடாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் கணவரைப் பிரிந்து வாழ்வ தாகவும், அவருடன் சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவலை நடிகை ரம்பா முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “என் திருமண வாழ்க்கை பற்றி வதந்தி பரவியுள்ளதாக என் சகோதரர் மூலம் எனக்குத் தக வல் கிடைத்தது. “நான் விவாகரத்துக் கோரியிருந்தால் நீதிமன்றத்தில் அதற் கான பதிவு இருக்கும் அல்லவா? “நான் நீதிமன்றத்திற்கு வந்து இருந்தால் மக்களுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்குமா இல்லையா?

“என் திருமண வாழ்வில் எந்தப் பிரச்சனையும் இல்லை,” எனத் தெரிவித்துள்ளார். ரம்பாவுக்கும் இந்திரன் பத்ம நாதனுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.

கணவர், குழந்தைகளுடன் நடிகை ரம்பா. கோப்புப் படம்