பெண்கள் வாக்குகளை அள்ள திமுகவின் புதிய வியூகம்

வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்பாடுபட்டேனும் வெற்றியை ஈட்டி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற திமுக பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் விதவை வேட்பாளர்கள் திட்டம். இந்தியாவிலேயே மதுவிற்கு அடிமையானோர் அதிகமாக இருப் பது தமிழகத்தில்தான் என்பது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு நடத்திய அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட ஆண் களில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு மதுப் பழக்கம் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இதனால், தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று எல்லா எதிர்க்கட்சிகளுமே முழங்கி வருகின்றன. ஆனால், மதுபானக் கடைகள் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் வருவதால் 'மதுவிலக்கு சாத்தியமில்லை' என்று ஒரே வரியில் மறுத்துவிட்டது ஆளும் அதிமுக. அதிமுகவின் இந்தப் பதிலைக் கொண்டே அதை வீழ்த்த திமுக திட்டம் தீட்டி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் நாட்டில் மதுவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல பெண்கள் கணவரை இழந்து நிராதரவாக விடப்பட்டுள்ளனர்.

ஆகையால், வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுவால் கணவரை இழந்த கைம்பெண்களை வேட்பா ளர்களாகக் களமிறக்கினால் உணர்ச்சிவயப்பட்ட தமிழர்களின், குறிப்பாக பெண்கள் வாக்குகளை முழுமையாக அள்ளலாம் என்று திமுக எண்ணியுள்ளதாக தமிழக நாளேட்டுச் செய்தி கூறுகிறது. முதல்வர் ஜெயலலிதா, முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக விதவை பெண்களை நிறுத்த திமுக முடிவு செய்துள்ளதாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!