தமிழக முதல்வர் வேட்பாளர் ராகுல் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை இந்தியப் பிரதமராக்க அக்கட்சி யினர் கனவு கண்டு வரும் வேளையில் அவரைத் தமிழக முதல்வராகப் பார்க்க விரும்பு வதாகக் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி, திரா விடக் கட்சிகள் தலையெடுத்த பிறகு இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெற முடியாமல் தவித்து வருகிறது.

போதாதற்கு, ஏகப்பட்ட உட் கட்சி மோதல்களாலும் அக்கட்சி தள்ளாடி வருகிறது. வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்காவிட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கதி அதோகதிதான் எனப் பலரும் கூறிவருகின்றனர். இந்த நிலையில், "2016 சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அப்படிப் போட்டியிட்டால் ராகுல் காந்தி தான் எங்கள் முதல்வர் வேட்பா ளர். தமிழக முதல்வர் நாற்காலி யில் ராகுல் அமரவேண்டும் என்பதே எங்கள் ஆசை," என்று கூறியுள்ளார் இளங்கோவன். மேலும், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி கட்சித் தலைமை விரைவில் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, கூட்டணி தொடர்பில் திமுக பொருளாளர் ஸ்டாலினின் மருமகன், ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேச உள்ளதாகத் தமிழகத் தகவல்கள் கூறுகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!