பந்தயப் பிடிப்பில் ஈடுபட்ட கிரிக்கெட் வீராங்கனைக்குத் தடை

மெல்பர்ன்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது இரவு-பகல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பணம் கட்டிப் பந்தயத்தில் ஈடுபட்ட அந்நாட்டு கிரிக்கெட் வீராங்கனை பீப்பா கிளியரி, 19 (படம்), ஆறு மாதம் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளார். மேலும் 18 மாதங்களுக்கு அவருக்கு இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலிய மாநில அணிக்காக விளையாடி வரும் கிளியரி 15.50 ஆஸ்திரேலிய டாலர் தொகைக்குப் பந்தயம் கட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. பந்தயத் தொகை மிகச் சிறியதாக இருந்தாலும் விதியை மீறியது குற்றம்தான் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது. பந்தயம் கட்டுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஊழல் தடுப்புப் பயிற்சிக்காக இவர் அனுப்பப்பட்டதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!