வெற்றுப் பாதையில் வெலன்சியா

பார்சிலோனா: சுவாரெஸ் நான்கு கோல்களையும் மெஸ்ஸி மூன்று கோல்களையும் அடிக்க, ஸ்பானிய அரசர் கிண்ண அரையிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் 7-0 என வெலன்சியாவை விரட்டி விரட்டிப் பந்தாடியது பார்சிலோனா காற் பந்துக் குழு. சிங்கப்பூர் பெரும்பணக்காரர் பீட்டர் லிம்மிற்குச் சொந்தமான வெலன்சியா குழு தொடக்கத்தி லேயே கோலை விட்டுத் தந்தது. அக்குழுவின் மத்திய திடல் ஆட்டக்காரர் ஆண்ட்ரே கோமஸ் கவனக் குறைவாக இருந்த நேரத் தில் அவரிடமிருந்து பந்தைத் தட்டிப் பறித்து சுவாரெசுக்குக் கடத்தினார் நெய்மார். அதை மிக அழகாக வலைக்குள் தள்ளினார் சுவாரெஸ்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மீண்டும் ஒருமுறை பந்து சுவா ரெஸ் மூலமாக வலைக்குள் புகுந்தது. இம்முறை அவருக்குத் துணையாக இருந்தவர் விடால். மெஸ்ஸி, நெய்மார், சுவாரெஸ் என்ற தென்னமெரிக்கக் கூட்டணி யைக் கட்டுப்படுத்த முடியாமல் வெலன்சியா தவித்தது. எப்போதாவது ஒருமுறைதான் வெலன்சியா ஆட்டக்காரர்களால் பார்சிலோனா வலைப்பக்கம் செல்ல முடிந்தது. ஆனாலும் பலன் கிட்டவில்லை.

வெலன்சியா குழுவிற்கெதிரான ஸ்பானிய அரசர் கிண்ண ஆட்டத்தில் 'ஹாட்ரிக்' கோலடித்த மகிழ்ச்சியில் பார்சிலோனா காற்பந்துக் குழுவின் மெஸ்ஸி (இடது), சுவாரெஸ். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!