மருத்துவர்கள்: விரும்பியபோது ஜெயலலிதா வீடு திரும்பலாம்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா முழுமையாகக் குண மடைந்துவிட்டார். இனி வீடு திரும்புவது அவரது விருப்பம் என்று நேற்றுக் காலை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர். “ஜெயலலிதாவுக்குத் தற்போது தம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியும். எது வேண்டும் என்பதை கேட்டுப் பெறுகிறார்,” என்று அந்த மருத்துவமனையின் தலைவரான டாக்டர் பிரதாப் ரெட்டி சொன்னார்.

இதற்கு முன் வெளியான தகவலில் முதல்வர் ஜெயலலிதா இன்னும் ஒரு சில நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை அதிமுகவின் மூத்த தலைவரான சி. பொன்னையனும் உறுதிப்படுத்தியிருந்தார். “முதல்வர் ஜெயலலிதாவின் நுரையீரலில் ஏற்பட்டிருந்த தொற்றுப்பாதிப்பு முழுவதும் சரி யாகிவிட்டது. அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார். செயற்கை சுவாசக் கருவியும் அகற்றப்படுகிறது. தற்போது அது சில சமயங் களில் மட்டுமே பயன்படுத்தப்படு கிறது,” என்று அதிமுக செய்தித் தொடர்பாளருமான திரு பொன் னையன் தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று காந்தி, காமராஜர், நேதாஜி, அப்துல் கலாம், எம்ஜிஆர், ரஜினிகாந்த், நடிகர் வடிவேலு போன்று வேடமிட்டுள்ள அதிமுகவினர் மருத்துவமனை முன்பு காத்திருந்த காட்சி. படம்: தமிழக ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கல்கி  சாமியாருக்குச் சொந்தமான ஆசிரமங்கள்,  தொழில் நிறுவனங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று  சோதனை நடத்தினர்.  படம்: ஊடகம்

17 Oct 2019

கல்கி சாமியாருக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை

வைரக் கண்காட்சியில் 3,50,000 வைரங் கள் ஒட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டி ருந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார். படம்: ஊடகம்

17 Oct 2019

3,50,000 வைரங்களுடன் கார்