பறக்கும் சாதன பயன்பாடு குறித்து அரசாங்கம் ஆய்வு

உய­ர­மான இடங்களில் உல­வும் கொசு போன்ற பூச்­சி­களை­யும் அதன் உற்­பத்­தியை­யும் தேடிப் பிடித்து துடைத்­தொ­ழிப்­ப­தற்­கான பறக்­கும் சாத­னம் 25க்கும் மேற்­பட்ட தேவை­களுக்­குப் பயன்­படுத்­து­வது குறித்து தேசிய சுற்­றுப்­புற வாரி­யம், கட்­ட­டம், கட்­டு­மான முகவை, மனித வள அமைச்சு ஆகி­ய­ பொது முகவைகளால் சோதித்­துப் பார்க்­கப்­பட்­டன. மேற்­கூரை­களில் வடி­கால் போன்ற­வற்றை இந்த பறக்­கும் சாத­னத்­தின் மூலம் எவ்­வாறு ஆய்வு செய்­வது போன்ற சோதனை­களை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் மேற்­கொண்டது. இது­போன்ற வடி­கா­லில் கொசுக்­கள் முட்டை­யி­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம். உய­ர­மான இடங்களில் இது­போன்ற வடி­கால்­களை முகவை ­யின் சோதனை­யா­ளர்­கள் பார்வை­யி­டு­வது என்­பது சற்று சிர­ம­மான காரி­யம்­தான். இச் சம­யங்களில் பறக்­கும் சாத­னங்களைப் பயன்­படுத்தி கொசு உற்­பத்­தி­யா­வதைத் தடுக்­க­லாம்.

கட்­டு­மா­னத் தளங்களி­லும் பறக்­கும் சாத­னம் சோதனை செய்து பார்க்­கப்­பட்­டது. ஏனெ­னில் கட்­டு­மா­னத் தளங்கள் ஏழு பொது முகவை­க­ளால் சோதிக்­கப்­பட வேண்­டி­யவை. எனவே பறக்­கும் சாத­னத்­தால் எடுக்­கப்­படும் புகைப்­ப­டங்களை பொது முகவை­கள் பகிர்ந்­து­கொள்­ளும் வகை­யில் இணை­யத் தளம் ஒன்றை முகவை­களுக்கு இடை­யி­லான குழு தொடங்­கி­யுள்­ளது. இதனால் ஒரே பணியை பல­முறை செய்­வது தவிர்க்கப்படுகிறது. பறக்­கும் சாத­னங்களை பொது முகவை­களுக்கு மொத்­த­மா­கக் கொள்­மு­தல் செய்­வ­தற்­கான குத்தகை, பறக்­கும் சாத­னம் சார்ந்த நிபு­ணத்­துவ சேவை ஆகி­ய­வற்­றுக்­கான குத்­தகைக்­கான ஒப்­பந்த அறி­விப்பை இந்த மாத இறு­திக்­குள் முகவை­களுக்கு இடை­யி­லான குழு விடுக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!