செந்தோசாவின் 'அண்டர் வாட்டர் வோர்ல்ட்'ல் நீந்தி வரும் அதிர்ஷ்டக் கடவுளின் கரங்களைத் தொட்டுப் பார்த்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் முதியோர். சீனப்புத்தாண்டையொட்டி செந்தோசாவின் அண்டர் வாட்டர் வோர்ல்டுக்கு சாரா ஆக்டிவிட்டி சென்டர் என்னும் இல்லத்தில் இருந்து மூத்த குடிமக்கள் 38 பேர் வருகை யளித்தனர். சீனப் புத்தாண்டையொட்டி அண்டர்வாட்டர் வோர்ல்டில் முக்குளித்து நீந்தி வரும் அதிர்ஷ்டக் கடவுள் பிப்ரவரி 22ஆம் தேதி வரை வருகையாளர்களுக்கு காட்சி தருவார்.
கடலடி உலகத்தில் நீந்தி வரும் அதிர்ஷ்டக் கடவுளின் கைகளைத் தொட்டுப் பார்த்து மகிழும் முதியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்