சிங்கப்பூரில் கூர் முனை வால் வாத்துகள்

கூர்முனை வால் வாத்துகள் என்றழைக்கப்படும் கூரான வாலைக் கொண்ட வாத்துகள் சிங்கப்பூரின் சுங்கை புலோ சதுப்பு நிலக் காடுகளுக்கு வருகை தந்துள்ளன. மெல்லிய, நீண்ட கழுத்தை­யுடைய இந்த அழகிய வாத்துகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சிங்கப்பூரில் தலை காட்டியுள்ளன. நேற்று முன்தினம் இரவு 7.00 மணி­யளவில் அப்பறவைகள் இரைக்­ காக அவ்விடங்களில் ஒதுங்கிய­போது கண்டுபிடிக்கப்பட்டன.

இப்பறவைகள் இதற்கு முன்னதாக சிங்கப்பூரின் செனோகோ பகுதியில் 1992ஆம் ஆண்டு காணப்பட்டதாக தேசிய பூங்காக்கள் வாரியம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது. இவ்வகை வாத்துகள் பிரிட்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடு களில் வாழ்கின்றன. ரஷ்யா, மங்கோலியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஆயிரக் கணக்கான பறவைகள் சிங்கப்­பூரின் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலக்காடுகளில் அடைக்கலம் நாடி வருகின்றன.

சிங்கப்பூரின் சுங்கை புலோவில் உள்ள பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலக்காடுகளுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை தந்துள்ள கூர் முனை வால் வாத்து. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!