சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக அமெரிக்க டாலர் 7 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி

அமெரிக்க டாலர் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று முன்தினம் படுவீழ்ச்சி கண்டது. அமெரிக்காவின் மந்தமான பொருளியலை சரிக்கட்டும் வகையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்க முறிகள் வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் அமெரிக்கா இப்போது எப்போதும் இல்லாத வகையில் பொருளியலில் அதனையொத்த 9 நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக 1.7 விழுக்காடு சரிந்துள்ளது. உலக நாடுகளின் பொருளியல் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழ்நிலையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

நேற்று நடந்த பரிவர்த்தனையில் சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக அமெரிக்க டாலர் படுவீழ்ச்சி கண்டுள்ளது. ஒரு அமெரிக்க வெள்ளி 1.4153 சிங்கப்பூர் வெள்ளிக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது. இது புதன்கிழமை நடந்த பரிவர்த் தனையைவிட 1.08 விழுக்காடு குறைவு. இதன் காரணமாக சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிரான 100 இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றிரவு 2.0943 வெள்ளியாகக் குறைந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!