20 ஆண்டுகளில் இரு எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகில் ‘எஸ்ஜிஎச்’

ஊட்ரம் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் பொது மருத்துவமனை யில் நோயாளிப் பராமரிப்புக்காக ஒதுக்கப்படும் இடம் அடுத்த 20 ஆண்டுகளில் மும்மடங்காகும். நேற்றுக் காலை பிரதமர் லீ சியன் லூங்கால் வெளியிடப்பட்ட அம்மருத்துவமனையின் பெருந்திட் டத்தில் இந்தத் தகவல் தெரிவிக் கப்பட்டது. மேலும், அந்தப் பகுதி யில் ஊட்ரம் சாலைக்கும் யூ டொங் சென் ஸ்திரீட்டுக்கும் இடையே உள்ள இரண்டு எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகில் சிங்கப் பூர் பொது மருத்துவமனை (எஸ்ஜி எச்) இடமாற்றம் பெறும்.

அதனால், பொதுப் போக்குவ ரத்து மூலம் அங்கு வந்திறங்கி மருத்துவமனைக்குச் செல்ல நோயாளிகளுக்கும் வருகையாளர் களுக்கும் வசதியாக இருக்கும். பெருந்திட்டத் தொடக்க நிகழ்ச் சியில் உரையாற்றிய பிரதமர் லீ, இந்தப் பெருந்திட்டத்தை 'மியூசிக் கல் சேர்ஸ் எக்ஸசைஸ்' என்று வர்ணித்தார். சுற்றியுள்ள கட்டடங் களும் சாலைகளும் நகர்ந்து கொண்டிருக்க மருத்துவமனை தொடர்ந்து இயங்கிக் கொண்டி ருப்பதை அது பிரதிபலிக்கிறது. "உயர்ந்த எண்ணிக்கையிலான நோயாளிகள் வரும் மருத்துவ மனையை நாம் ஊட்ரம் பார்க் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் கொண்டு செல்வோம். அப்போது தான் எம்ஆர்டி ரயிலிலிருந்து இறங்கி தங்கள் பராமரிப்பு இடத் துக்கு நோயாளிகளும் வருகையா ளர்களும் செல்ல முடியும்," என் றார் பிரதமர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனை பெருந்திட்டத்தின் மாதிரி வடிவத்தைத் தமது கைபேசியில் படம் எடுக்கிறார் நேற்று பெருந்திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் லீ சியன் லூங் (வலக்கோடி).

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!