கானக் குயில் காஜல்

காஜல் கானக் குயிலாக மாறி 'சக்கரவியூகா' என்ற கன்னடப் படத்திற்காக ஒரு பாடல் பாடி இருக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் மற்றும் பலர் நடித்த 'அழகுராஜா' படத்தில் மேடைப் பாடகி கதாபாத்திரத்தில் நடித்தவர் காஜல் அகர்வால். அந்தப் படத்தில் சந்தானத்தின் நகைச்சுவையை விட தன்னுடைய நடிப்பால் ரசிகர்களைச் சிரிக்க வைத்தார் காஜல் அகர்வால். அந்த 'சித்ரா தேவிப்ரியா' கதாபாத்திரத்தை இன்றும் தொலைக்காட்சியில் பார்த்தால் சிரிக்காதவர்கள் எவரும் இல்லை எனலாம்.

இப்போது எதற்கு அந்த ஞாபகம் என்கிறீர்களா? காஜல் அகர்வால் நிஜமாகவே ஒரு படத்தில் பாடி இருக்கிறார். கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்து வரும் 'சக்கரவியூகா' என்ற படத்தில் அவர் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால் பாடிய பாடலை நேற்று ஒலிப்பதிவு செய்தனர்.

தமிழில் வெளிவந்த 'இவன் வேற மாதிரி' படத்தின் கன்னட மறுபதிப்புதான் 'சக்கரவியூகா' படம். இப்படத்திற்காக தெலுங்கு நடிகரான ஜுனியர் என்டிஆரும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இப்படத்தைத் தயாரிக்கும் லோகித், ஜுனியர் என்டிஆரின் நெருங்கிய நண்பர் என்பது கூடுதல் தகவல். புனித் ராஜ்குமாரின் 25வது படமாக உருவாகி வருகிறது 'சக்கரவியூகா'. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் காஜல் அகர்வால் இதுவரை தான் நடித்த எந்த ஒரு படத்திலும் பாடியதில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!