‘யூடியூப்’ வழியாகத் தமிழ் இலக்கணம்

பேசுவதற்கும் கேட்பதற்கும் எழுது வதற்கும் இனிமையான மொழி தமிழ் என்பது உலகறிந்த விஷயம் என்றாலும் தமிழ் இலக்கணம் என்று சொன்னால் சிலர் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள். காரணம், தமிழ் இலக்கணத்தைக் கற்றுக்கொள்வது மிகக் கடினம் என்பது அவர்கள் வாதம். இக்காலத் தலைமுறையினரில் மிகச் சிலரே தமிழ் இலக்கணத்தைக் கருத்தூன்றிப் படிக்கும் நிலை இருக்கிறது. அதைத் தகர்த்து அனைவரும் தமிழ் இலக்கணத்தை அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் சீரிய முயற்சி எடுத்து வருகிறார் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் ஒன்றிய அரசுப் பள்ளி ஆசிரியரான ரா.தாமோதரன் (படம்). இப்போதைய தொழில்நுட்ப யுகத்தில், தமிழ் இலக்கணத்தை எளிமையான முறையில் இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல 'யூடியூப்' இணையத் தளத்தை அவர் பயன்படுத்தி இருக்கிறார்.

யூடியூபில் தமது பாடங்களை ஏற்றி, தொழில்நுட்பத்தின் வழி யாக இலக்கணத்தைக் கற்றுத் தருகிறார் அவர். தமிழ் மொழியின் சிறப்பெழுத் தான 'ஃ' உருவானது எப்படி, மகரக்குறுக்கத்தின்போது குறையும் மாத்திரைகளின் அளவு ஆகியவற்றை மாணவர்களே கற்பிக்கின்றனர். இலக்கணத்துடன், மாணிக்க வாசகர் பாடல்கள், விழிப்புணர்வு வாசகங்கள், சிலப்பதிகாரம் உள் ளிட்டவைகளும் விளக்கப்பட்டு இருக்கின்றன. காணொளிகளை மாணவர்களின் குரலிலும் சக ஆசிரியர்கள் வழியாகவும் விளக் குவது இன்னும் சிறப்பு. தமது இந்த முயற்சிக்கு மூன்று நோக்கங்களை முக்கிய காரணங்களாக முன்வைக்கிறார் திரு தாமோதரன். "மல்டிமீடியா எனும் பல்லூடகம் வழியாகத் தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க வேண்டும். மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகளில் தமிழ் இலக்கணத்தை முறையாகக் கற்பிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் சீரிய தமிழைக் கற்றுக்கொள்ள வேண் டும்," என்றார் அவர். "தமிழ் இலக்கணத்தைப் பற்றிய முறையான காணொளிகள் இதுவரை இணையத்தில் வர வில்லை. அப்படி வெளியான சில காணொளிகளும் பயிற்சித்தாள் போலத்தான் இருக்கின்றன. குறுங்காணொளிகளாக உள்ள இவற்றை, இன்னும் விரிவு படுத்தும் திட்டமும் இருக்கிறது. இப்போது பத்தாம் வகுப்புப் பாடங்கள் முழுவதும் எழுத்து வடிவில்தான் காணொளிகளாக வந்துள்ளன. அவை அனைத்தை யும் படங்கள் வடிவிலான காணொ ளிகளாக மாற்றும் முயற்சியில் இருக்கிறோம்" என்றும் அவர் சொன்னார். https://youtu.be/382LEYtz Dh4 எனும் முகவரியில் இவரது தமிழ் இலக்கணப் பாடங்களைக் கண்டு படித்து தமிழறிவை வளர்த் துக்கொள்ளலாம். நன்றி=தி இந்து

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!