அதிமுக சார்பில் போட்டியிட இளையர்கள் படையெடுப்பு

சென்னை: தமிழக சட்டசபைக்கு மே இரண்டாவது வாரத்தில் தேர் தல் நடத்தப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினருமே தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார் கள். கூட்டணிகள் இன்னும் உறுதியாகாத நிலையில் எந்தக் கட்சி எந்தப் பக்கம் போகும்? யார் - யாரெல்லாம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் பலமாகவே உள்ளது. அ.தி.மு.க. தேர்தல் பணி களை முன்கூட்டியே தொடங்கிவிட் டது. அக்கட்சி சார்பில் போட்டி யிடுபவர்கள் தலைமை கழகத்தில் விருப்ப மனுக்களை வாங்கி விண்ணப்பிக்கலாம் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப் பட்டு வருகின்றன. கடந்த மாதம் 20ஆம் தேதியில் இருந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் விண்ணப்பிக்க மனுக்கள் பெறப் பட்டு வருகின்றன. இந்த மாதம் 3ஆம் தேதி வரை விருப்ப மனுக் கள் பெறப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று கடைசி நாள் என்பதால் அ.தி.மு.க. வினர் போட்டிபோட்டுக்கொண்டு விண்ணப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.

எப்போதுமே அரசியல் கட்சி களின் சார்பில் தேர்தலில் போட்டி யிட விருப்ப மனுக்கள் வாங்கும் போது, வெள்ளை வேட்டி - சட்டை அணிந்தவர்களையே அதிகம் பார்க்க முடியும். பெண்கள் என் றால் பெரும்பாலும் நடுத்தர வயதை எட்டிய திருமணமானவர் களாகவே இருப்பார்கள். இது போன்ற பெண்களின் பின்னணி யில் அவர்களது தந்தையோ, கணவன்மார்களோ நிச்சயம் இருப்பார்கள். இதுபோன்ற நிலை மாறி, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இளம் பெண்களும், இளைஞர் களும் படையெடுத்து வருகிறார் கள். அ.தி.மு.க.வின் கிளை அமைப்பான இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக இருக்கும் பலர், நாகரிக உடைகளில் வந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் விருப்ப மனுக்களை வாங்கி விண்ணப்பித்து வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் சுடிதார் அணிந்த இளம் பெண்கள், ஜீன்ஸ், டி.சர்ட் அணிந்த இளைஞர்கள் ஆகி யோரை அதிகமாகவே காண முடி கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!