நெய்மாருக்காக $298 மில்லியன் விலைகொடுக்க முன்வந்த மேன்யூ

மட்ரிட்: உலகில் இதுவரை இல்லாத அளவாக பிரேசில் நட்சத்திர காற்பந்து ஆட்டக்காரர் நெய்மாரை ஒப்பந்தம் செய்ய $298 மில்லியன் கொடுக்க மான்செஸ்டர் யுனைடெட் குழு முன்வந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். அதே வேளையில், பார்சிலோனா குழுவில் நெய்மார் மகிழ்ச்சியாகத்தான் இருப்பதால் ஊடகங்கள் பரபரப்பாக ஏதும் செய்தி வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2013ஆம் ஆண்டில் பிரேசிலின் சான்டோஸ் குழுவில் இருந்து பார்சிலோனாவுக்கு இடம் மாறினார் நெய்மார். பார்சாவுடனான அவரது ஒப்பந்தம் இன்னும் இரு ஆண்டுகளுக்கு இருக்கிறது. இதற்கிடையே, நெய்மார் மீது தொடரப்பட்ட வரிஏய்ப்பு வழக்கைத் தள்ளுபடி செய்தது பிரேசில் நீதிமன்றம். அந்த விவகாரத்தில் பிரேசில் உள்நாட்டு வருவாய் ஆணையம் இன்னும் தனது கலந்தாய்வை முடிக்காததால் அந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!