‘தெறி’ டீசர் புதிய சாதனை

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'தெறி'. இப் படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு யுடியூபில் வெளியிடப் பட்டது. இந்த முன்னோட்டப் படத்தின் வரவுக்காகவே காத்திருந்தது போல விஜய் ரசிகர்கள் முன்னோட்டக் காட்சியைத் தெறிக்க விட்டுவிட்டார்கள். 'வேதாளம்' படத்தின் முன்னோட்டக் காட்சியைவிட 24 மணி நேரத்திற்குள் அதிகமான லைக்குகளைப் பெற்று 'தெறி' படத்தின் முன்னோட்ட காணொளி புதிய சாதனை படைத்துள்ளது.

'வேதாளம்' டீசர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக 10 மணி நேரத்திற்குள் 79,000 பேரிடம் விருப்பக் குறிகளைப் (லைக்குகள்) பெற்றுள்ளது. ஆனால், 'தெறி' டீசர் அதே 10 மணி நேரத்திற்குள் 1,20,000 விருப்பக் குறிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. மேலும், 'வேதாளம்' முன்னோட்டக் காட்சி இதுவரை வாங்கியுள்ள 1,40,000 லைக்குகளை இன் னும் சில மணி நேரத்திற்குள் 'தெறி' முன்னோட்டக் காணொளி மிஞ்சி விடும். என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!