சண்டக்கோழி-2ல் மீரா ஜாஸ்மின்

லிங்குசாமி இயக்கத்தில் 2005ல் விஷால் நடித்த படம் சண்டக்கோழி. இந்தப் படத்தில் விஷாலுடன் ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதையடுத்து லிங்குசாமியும் விஷாலும் இணைந்து சண்டக்கோழி-2 படத்தை எடுக்க முடிவுசெய்துள்ளனர். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் புதுச்சேரியில் தொடங்கவுள்ளது.

அதையடுத்து, காரைக்குடி, கும்பகோணம் போன்ற இடங்களில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் நடப்பது உறுதியாகியுள்ளது. அந்த வகையில், மொத்தம் 60 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் லிங்குசாமி. மேலும், இதுவரை லிங்குசாமி படங்களிலும் விஷாலுடன் இணைந்து நடிக்காத அனுஷ்காவை இந்த சண்டக்கோழி=2 படத்தில் நாயகியாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப் பட்டுள்ளதாம். அதோடு, இந்தப் படத்தின் படப்பிடிப்புக் காரணமாக இந்தியில் தான் இயக்கி வந்த 'பையா' ரீமேக் படப்பிடிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளாராம் இயக்குநர் லிங்குசாமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!