இந்திக்கு படையெடுக்கும் காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலின் கவன மெல்லாம் இப்போது இந்திப் படங்கள்தான். மீண்டும் இந்திப் பக்கம் நோக்கிச் செல்ல முடிவெடுத்துள்ளார் என கோடம் பாக்கத்தில் கிசுகிசுக்கப் படு கிறது. தமிழ், தெலுங்குத் திரையுல கில் அவருக்குக் கிடைத்த வரவேற்பு இந்தித் திரையுலகில் கிடைக்கவில்லை. 'சிங்கம்', 'ஸ்பெஷல் 26' என 2 இந்தி படங்களில் நடித்தபோதும் புதிய வாய்ப்புகள் குவியவில்லை. கவர்ச்சிதான் இந்தி மார்க் கெட்டுக்குக் கைகொடுக்கும் என்று எண்ணியவர் அண்மையில் மும்பையில் நடந்த பட விழாவுக்குக் கவர்ச்சி பளிச்சிட வந்து பார்வையாளர்களை அசத்தினார். பாலிவுட்டில் குத்தாட்டம் ஆடும் நாயகிகள் தினம் தினம் இதுபோல் போஸ் தருவதால் காஜலின் கவர்ச்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அடுத்த ஆயுதமாக லிப் டு லிப் கிஸ் கையிலெடுத் திருக்கிறார். ரன்தீப் ஹுடாவுடன் காஜல் நடிக்கும் புதிய இந்தி படம் 'டு லஃப்ஸே„ன் கி ககானி'. இதில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். கவர்ச்சியை மூடி வைத்து இந்தியில் நடித்து வந்த காஜல் இப்படம் மூலம் விதிமுறைகளைத் தளர்த்தி இருக்கிறார். ரன்தீப்புடன் அவர் இதழோடு இதழ் பதிக்கும் முத்தக் காட்சியில் நடித்துப் பாலிவுட் இயக்குநர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!