விஜயகாந்த் வருவாரா, மாட்டாரா என குழம்பும் பாஜக

சென்னை: கூட்டணி குறித்து விஜயகாந்த் தொடர்ந்து மவுனம் காத்து வருவதால் அவர் வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் எல்லா கட்சிகளையுமே சூழ்ந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டு விரைவாக தேர்தல் பிரசாரத்தை தொடங்க பாஜக மேலிடம் விரும்புகிறது. இதற்காக கொச்சியில் தமி ழக நிர்வாகிகளுடன் பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். கடந்த தேர்தலில் பாஜக அணியில் தேமுதிகவும் பாமகவும் இடம்பெற்று இருந்தன.

வருகிற தேர்தலில் மீண்டும் அந்தக் கட்சிகளைச் சேர்த்து கூட்டணியை வலுப்படுத்துவது பற்றி விவாதித்தனர். அப்போது பாமகவும் தேமு திகவும் சில பிரச்சினைகளில் பிடிவாதமாக இருப்பது குறித்து தெரிவித்தனர். தேமுதிக தலைவர் விஜய காந்த் திமுகவுடனும் பேசிக் கொண்டிருக்கிறார். எந்தப் பக்கம் செல்வது என்று முடிவு செய்யாமல் அவர் இழுத்தடித்து வருகிறார். இதனால் அமித் ஷாவும் குழப்பம் அடைந்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் நேற்று முதல் பெறப்பட்டன. கோயம் பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதீஷ் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்டார். தேமுதிகவில் எல்எல்ஏ சீட் கேட்டு, சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ராதிகா என்ற திருநங்கை மனு கொடுத்தார். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!