வீடு புதுப்பிப்பு நிறுவனங்களுக்கு புதிய அங்கீகாரத் திட்டம்

வீடு புதுப்பிப்பு நிறுவனங்களுக்கு புதிய அங்கீகாரத் திட்டம் தொடங் கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நம்பிக்கையான புதுப்பிப்பு நிறுவனங்களைத் தேடும் உரிமையாளர்களுக்கு நேற்று அறிமுகமான புதிய அங்கீ காரத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிப்பு நிறுவனங்கள் மூடப் பட்டாலோ அல்லது நொடித்துப் போனாலோ வைப்புத் தொகை செயல்பாடு பத்திரத்தின் மூலம் உரிமையாளர்களைப் பாதுகாப்பது 'கேஸ்டிரஸ்ட்=ஆர்சிஎம்ஏ' என்ற புதிய அங்கீகாரத் திட்டத்தின் நோக்கமாகும். தற்போதைய கேஸ்டிரஸ்ட் அங்கீகாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய திட்டத்தில் வைப்புத் தொகையைப் பாதுகாக்கும் அம்சம் இல்லை. தற்சமயம் 30 கேஸ்டிரஸ்ட் அங்கீகாரம் பெற்ற புதுப்பிப்பு நிறு வனங்கள் உள்ளன. புதிய கேஸ்டிரஸ்ட்=ஆர்சிஎம்ஏ திட்டத்தை கேஸ் எனும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கமும் சிங்கப்பூர் புதுப்பிப்பு ஒப்பந்தகாரர்களும் மூலப் பொருள் விநியோகிப்பாளர்கள் சங்கமும் உருவாக்கி இருக்கின்றன. செலவுகள் வெளிப்படையாக இருப்பதையும் வேலைகளுக்கு பொறுப்பு ஏற்பதையும் புதிய அங்கீ காரத் திட்டம் உறுதி செய்கிறது.

மேலும் பழைய, புதிய கேஸ் டிரஸ்ட் திட்டத்தின்படி நிறுவனங்கள் தெளிவான, முறையான வகையில் பிரச்சினைகளைத் தீர்த் துக்கொள்ளும் வழிமுறைகளைக் கொண்டிருப்பது அவசியம். பயிற்சி பெற்ற விற்பனை யாளர்கள், பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் தெளிவான கொள் கை, வேலையிடத்தில் வேலைகளை கட்டாயமாக மதிப்பிடுதல் போன்ற அம்சங்களும் இரண்டு திட்டங் களில் உள்ளடக்கியிருக்கின்றன. புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் அத் திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற முதல் ஐந்து புதுப்பிப்பு நிறுவனங் கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!