அதிகாரிகளின் ஓயாத பணி

சீனப் புத்தாண்டைக் கொண்டாட விடுமுறை நாட்களில் பலரும் ஆயத்தமாகும் வேளையில் குடி நுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் அதிகாரிகள் சிங்கப்பூரின் எல்லைகளைப் பாது காப்பதில் அயராது உழைத்து வரு கின்றனர். "நமது அதிகாரிகள் துடிப் புடனும் நிபுணத்துவத்துடனும் தங் களுடைய பணிகளில் மகிழ்வுடன் ஈடுபடுவதைக் காண்பது மகிழ்ச் சியைத் தருகிறது," என்று சாங்கி விமான நிலையத்துக்கு வருகை யளித்த உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம் ரின் அமின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று மதியம் விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி ஆகாயவெளி தளபத்தியத்தை அவர் சுற்றிப் பார்த்தார். அப்போது முன்நிலை அதி காரிகளின் கடப்பாட்டையும் அர்ப் பணிப்பையும் பாராட்டிய திரு அம்ரின் அமின், அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். முனையம் 3ல் பயணிகள் புறப் பாடு நிலையத்திலும் பயணிகள் வருகை நிலையத்திலும் போடப் பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக் கைகள் நாடாளுமன்றச் செய லாளருக்கு விவரிக்கப்பட்டது. சாங்கி விமான நிலையத்தில் அங்கிருந்த சில விமானப் பயணி களையும் ஊழியர்களையும் திரு அம்ரின் அமின் சந்தித்தார்.

சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் பயணிகளின் பெட்டிகளை குடிநுழைவு ஆய்வாளரான என். சரவணன், 35, (வலம்) சோதனையிடுவதை உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமினும் (நடுவில்) குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கான துணை ஆணையர் ஆவ் கும் சோங்கும் நேற்று நேரில் பார்வையிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!