சீனப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேற்று மரினா பேயில் 'ரிவர் ஹொங் பாவ் 2016' கொண்டாட்டம் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் லீ சியன் லூங் பங்கேற்றார். ரிவர் ஹொங் பாவ் 30வது ஆண்டைக் கொண்டாடும் வகையிலும் அமைந்த கேளிக்கை நிறைந்த நிகழ்ச்சியில் ஒளிவீசும் மரங்கள், விளக்குகள், கடல் நாக உருவங்கள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் பலர் பல வண்ணக் குடைகளை ஏந்தி புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். படம்: சாவ் பாவ்