காபூல் பள்ளிவாசலில் தாக்குதல்: பலர் பலி; ஏராளமானோர் காயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் உள்ள ‌ஷியா முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றில் நேற்று குண்டு வெடித் ததில் குறைந்தது 27 பேர் உயிர் இழந்ததாகவும் சுமார் 35 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரி கள் கூறினர். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி அந்த பள்ளிவாசலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக உள்துறை அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப் பேற்கவில்லை. அத்தாக்குதலின்போது அந்த பள்ளிவாசலுக்குள் இருந்த ஒருவர் அதுபற்றிக் கூறினார். அந்த பள்ளிவாசலில் பலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று பெரும் சத்தம் கேட்டது. சன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அங்கு என்ன நடக்கிறது என்பதை தன்னால் யூகிக்க முடியவில்லை என்றும் கூக்குரல் எழுப்பியபடி அங்கிருந்து வெளியில் ஓடி வந்ததாகவும் அவர் சொன்னார்.

காபூலில் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் கூடியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்ட டாக்டர் வீ ஜீ செங் 15,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். படம்: பெர்னாமா

17 Nov 2019

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி

ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச பலத்த பாதுகாப்புடன் தமது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றார். படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

வாக்காளர்கள் சென்ற பேருந்துகள் மீது துப்பாக்கிச்சூடு, கல்வீச்சு