மோசடிப் புகார்: குஜராத் முதல்வருக்கு நெருக்கடி

காந்திநகர்: குஜராத் முதல்வர் அனந்தி பென் படேல் நில மோசடி யில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இதையடுத்து அனந்தி பென் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதனால் குஜராத் முதல்வருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின்னர், பாரதிய ஜனதா தலைமை அனந்தி பென்னை முதல்வராக்கியது.

எத்த கைய புகாரிலும் சிக்காத ஒருவ ரையே முதல்வர் பதவிக்கு தேர்வு செய்திருப்பதாகவும் அக்கட்சித் தலைமை கூறியது. இந்நிலையில், அனந்தி பென் தனது மகளுக்காக அரசு நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு தனி யார் நிறுவனம் ஒன்றுக்கு ஒதுக்கி இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. அனந்தி பென்னின் மகள் அனார்ஜெஷ் படேல் அக்குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் பங்குதாரர் ஆவார். அந்த நிறுவனத்துக்கு குஜராத் மாநில அரசு அண்மையில் 250 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. இந்த நில ஒதுக்கீடே அனந்தி பென் சர்ச்சையில் சிக்க காரணமாக அமைந்துள்ளது.

கிர்காடு என்ற பகுதியில் அமைந்துள்ள அந்த 250 ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு 125 கோடி ரூபாயாகும். ஆனால் அதை மறைத்து, வெறும் ஒன்றரை கோடி ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு அனார்ஜெஷ் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு அந்நிலத்தை குஜராத் அரசு ஒதுக்கீடு செய் துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து முதல்வர் அனந்தி பென்னுக்கு எதிராகத் தீவிரமாக களமிறங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. "இந்த நில மோசடி குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசார ணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதற்கு முன்னர் முதல்வர் அனந்தி பென் படேல் பதவி விலக வேண்டும். "அப்போது தான் விசாரணை தங்கு தடைகளின்றி நடைபெறும்," என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!