‘போக்கிரி ராஜா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஜீவா நடிப்பில் கடைசியாக 'யான்' படம் வெளியானது. கடந்த ஆண்டு அவர் நடித்து எந்தப் படமும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தார்கள். இப்போது அவரது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'போக்கிரி ராஜா', 'திருநாள்', 'கவலை வேண்டாம்' ஆகிய 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் முதலாவதாக 'போக்கிரி ராஜா' படம் வெளியாகும் என்று கூறப் படுகிறது. இம்மாதம் 26ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். மேலும் சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'புலி' படத்தைத் தயாரித்தவர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இப்படத்தை ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

'போக்கிரி ராஜா' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் ஜீவா, ஹன்சிகா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!