விக்ரமின் உளவாளியான நயன்தாரா

விக்ரமுக்கு ஜோடியாக 'இருமுகன்' படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தில் விக்ரம் இரண்டு தோற்றங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா இப்படத்தில் ரகசிய உளவாளியாக நடிப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. நயன்தாராவுக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, நயன்தாரா 'பில்லா' படத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இருமுகன்' படத்தை 'அரிமா நம்பி' இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 'புலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் சுவரொட்டிகள் அண்மையில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!