வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அதிரடி ஆட்டத் தால் ஆஸ்திரேலியா வாகை சூடியுள்ளது. நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்தடிக்க முடிவு செய்தது. அந்த அணியின் மார்ட்டின் குப்தில், பிராண்டன் மெக்கெல்லம் ஆகியோர் தொடக்க வீரர் களாகக் களம் இறங்கினார்கள்.
குப்தில் 45 பந்துகளில் 31 ஓட்டங்களும் மெக்கெல்லம் 12 பந்துகளில் 28 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த வில்லியம்சன் 60 ஓட்டங்களும் சான்ட்னெர் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங் களும் குவிக்க, நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ஓட்டங்கள் சேர்த்தது. 282 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பந்தடிக்கத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜாவும் டேவிட் வார்னரும் களம் இறங்கினார்கள்.
சிறப்பாகப் பந்தடித்து 98 ஓட்டங்களைக் குவித்த டேவிட் வார்னர் (இடது) ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டார். படம்: ஏஎஃப்பி