கார்கள் மண்டும் காடல்ல, மக்கள் வாழும் நாடு

சிங்கப்பூரின் நிலவரம் கடந்த 50 ஆண்டுகளைப் போல இப்போது இல்லை. காலம் மாறுகிறது. பரிணாம வளர்ச்சி இடம்பெறுகிறது. மக்கள்தொகை கூடுகிறது. பொருளியல் அடியோடு உருமாறுகிறது. சுற்றுச்சூழல், மக்களின் மன நிலை, தேவைகள் எல்லாம் மாறுகின்றன. இந்த மாற்றங்கள், சிங்கப்பூரர் ஒருவர் தன் வீட்டை விட்டுக் கிளம்பி உலகம் முழுவதற்கும் வசதியாக, இடையூறு இல்லாமல், தேக்கமில்லாமல், தங்குதடை இல்லாமல் சென்று வந்து தன் வேலைகளைத் திறம்பட, ஆற்றல்மிக்க, நவீன முறைகளில் உடனுக்குடன் செய்யவேண்டிய தேவை யைக் கட்டாயமாக்கிவிட்டன. அதேபோல பொருளியல் காரியங்களையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

நிலப்பற்றாக்குறை நீங்காத ஒன்றாக இருக்கும் சிங்கப் பூரில் இந்தச் சவால்களை எல்லாம் எப்படிச் சமாளிப்பது? இதற்காகவே அரசாங்கம் துணிச்சலான, பிரம்மாண்ட மான, பெரும் செலவிலான திட்டம் ஒன்றைத் தீட்டி அமல் படுத்தி வருகிறது. சரளமான போக்குவரத்துக்குத் தடை யாகவும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பாகவும் இருக்கக்கூடிய வாகனங்களைத் தவிர்த்துக்கொள்வது அத்திட்டம். 'கார்களை நாடாத சிங்கப்பூர்' என்ற அந்தத் திட்டத்தில், அடர்த்தியாக ரயில் கட்டமைப்பை, பரந்த அளவிலான பேருந்துக் கட்டமைப்பை உருவாக்குவது; மக்கள் நடக்கவும் சைக்கிளோட்டவும் வசதியாக பாதைகளைப் பரவலாக்கி ஒருங்கிணைத்து பிரபலமாக்குவது; மின்சாரக் கார்களைப் பகிர்வது; ஓட்டுநர் இல்லாத வாகனங்களைப் பரிசோதித்துப் பார்ப்பது எல்லாம் அடங்கும்.

மொத்தத்தில் சிங்கப்பூரை பாதுகாப்புமிக்கதாக, பசுமை மிக்கதாக, கார்களை நாடாத நகரமாக ஆக்குவது நோக்கம். 2030ஆம் ஆண்டில் சிங்கப்பூரர்களில் முக்கால்வாசிப் பேர் கார்களுக்குப் பதிலாக ரயில், பேருந்து, சைக்கிள் போன்ற போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தச் செய்வது இத்திட்டத்தின் இலக்கு. 2050ல் இந்த அளவு 85%ஆக அதிகரிக்க வேண்டும். இதற்காக அரசாங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெருந்தொகையைச் செலவிடவிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக வடக்கு தெற்கு விரைவுச்சாலை 'வடக்கு தெற்கு வழித்தடமாக' உருமாறும். விரைவுப் பேருந்து சேவையும் சைக்கிளோட்ட நடைபாதைகளும் அமையும். அதேபோல மத்திய சிங்கப்பூரில் இருக்கும் பென்கூலன் ஸ்திரீட்டின் 450 மீட்டர் பகுதியானது 2017ல் மூன்று தட நடையர் வழி, சைக்கிளோட்ட தடம் ஆகியவற்றுடன் புதிய வசதியாக ஆகப்போகிறது. தீவு முழுவதும் சைக்கிளோட்டப் பாதைகளும் நடையர் பாதைகளும் அமைக்கப்பட்டு அவை ஒன்றிணைக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் அறிவித்திருக்கிறார்.

புக்கிட் பாஞ்சாங், புக்கிட் தீமா குடியிருப்பாளர்களுக்காக பிரதமர் லீ சியன் லூங் சென்ற மாதம் திறந்துவைத்த புதிய டௌன்டவுன் ரயில் வழித்தடம் 2, 'காரை நாடாத சிங்கப்பூர்' திட்டத்தையொட்டியே அமைக்கப்பட்டது. இது எடுத்த எடுப்பிலேயே விரும்பிய பலனைத் தரத் தொடங்கி விட்டது. இதில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிக ரித்துவிட்டது. இந்த வழித்தடம் நெடுகிலும் அமைந் துள்ள பள்ளிக்கூடங்களைப் பார்க்கையில் காலை உச்ச நேரத்தில் போக்குவரத்து தேக்கம் கணிசமாக அகன்று இருப்பதாகத் தெரிகிறது. வசதியாக இருந்தால் பொதுப் போக்குவரத்துக்கு உடனே மாறிக்கொள்ள தாங்கள் தயார் என்பதை இதன் மூலம் சிங்கப்பூரர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்ல. அரசாங்கத்தின் கலந்துரையாடல் கூட்டங்களில் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்கால சிங்கப்பூர் இப்படி இப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று கருத்துகளை, யோசனைகளை, எண்ணங்களை முன்வைக்கும் இளம் சிங்கப்பூரர்களும் காரை தவிர்த்துக் கொண்டு சைக்கிள், நடை, பொதுப்போக்குவரத்துக்கு அதிக ஆதரவுக் குரல் கொடுத்துவருகிறார்கள்.

இந்தக் கலாசார மாற்றம்தான் இனிமேல் நீண்டகாலப் போக்கில் வருங்கால சிங்கப்பூருக்கு ஏற்றதாக, தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கும் என்பதை தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் சுட்டிக்காட்டி இருக்கிறார். கார்கள் என்பது பணக்கார நாட்டுக்கு, பெருமைக்கு அடையாளம் என்ற மனப்போக்கு மாறவேண்டிய காலம் கனிந்துவிட்டதால் இப்படிப்பட்ட கலாசார மாற்றம், அமைச் சர் கூறியதைப் போல், சிங்கப்பூரை கார்கள் மண்டும் காடாக ஆக்காமல் மக்கள் வசதியாக வாழும் நாடாக ஆக்கும். அப்படிப்பட்ட நாட்டில் மக்கள் விரும்பிய நேரத்தில் விரும்பியபடி தங்குதடையின்றி நடமாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!