திட்டமிட்டபடி ஏவுகணையை பாய்ச்சியது வடகொரியா

அனைத்துலக சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா நெடுந்தொலைவு ஏவுகணையை விண்ணில் பாய்ச்சியுள்ளது. டோங் சாங்=ரி ஏவு கணைத் தளத்திலிருந்து நேற்றுக் காலை சிங்கப்பூர் நேரப்படி 8.30 மணிக்கு அந்த ஏவுகணை பாய்ச்சப் பட்டதாக தென்கொரிய தற் காப்பு அமைச்சின் பேச் சாளர் தெரிவித்தார். செயற்கைக்கோள் தாங் கிய அந்த ஏவுகணையைத் தான் வெற்றிகரமாகச் செலுத்திவிட்டதாக வட கொரியாவும் உறுதிப்படுத் தியது.

தங்களது தலைவர் கிம் ஜோங்=உன் ஆணைப்படி இது ஏவப்பட்டதாக வட கொரியாவின் கேஆர்டி தொலைக்காட்சி தெரிவித் தது. அந்த ஏவுகணை ஜப்பா னின் ஒக்கினாவாவைக் கடந்து சென்றதாகவும் அதன் எரிசிதைவுகள் தென்கொரியாவின் தென்மேற்கிலுள்ள மஞ்சள் கடல் பகுதியில் விழுந்த தாகவும் தென்கொரியா வின் ஆகப் பெரிய அரசாங்க ஊடகமான யோன் ஹாப் கூறியது. ஏவுகணை ஏவப்பட்ட தும் ராடார் திரையிலிருந்து மறைந்துவிட்டதால் அதனை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியுற்றதாக ஆரம்பத்தில் அந்த ஊடகச் செய்தி குறிப்பிட்டது. இருப்பினும் சிறிது நேரத் தில் அது திருத்தப்பட்டு ஏவுகணை விண்ணில் சென்று கொண்டிருப்ப தாகக் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!