பெரிய வகை கார்களில் வாடிக்கையாளர்கள் நாட்டம்

வாகன உரிமைச் சான்­றி­தழ் கட்­ட­ணங்கள் வீழ்ச்­சி­ய­டந்­துள்­ளதை அடுத்து கார்­களின் விற்பனை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக வாகன விற்­பனை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். 'பி' பிரிவு பெரிய வகைக் கார்­களுக்­கான 'சிஓஇ' கட்­ட­ணம் ஆறு ஆண்­டு­களில் இல்லாத அள­வுக்­குக் குறைந்­தி­ருப்­ப­தால் சிலர் அவ்­வகைக் கார்­களுக்கு பதிவு செய்­துள்­ள­தா­க­வும் அவர்­கள் கூறியுள்­ள­னர். சீனப் புத்­தாண்­டுக் கொண் டாட்­டங்களை முன்­னிட்டு காட்சிக் கூடத்தை மூடத் திட்­ட­மிட்­டி­ருந்த போர்னியோ மோட்­டார்ஸ் நிறு­வ­னம், வாடிக்கை­ யா­ளர்­களின் வலுவான தேவை யைக் கருத்­தில் கொண்டு நேற்றும் செயல்­பட்­டது. மேலும், ஹுண்டாய், நிஸ்ஸான் காட்சிக் கூடங்களி­லும் கூட்டம் அதி­க­மாக இருந்த­தாக சிஎன்ஏ தெரி­வித்­தது.

கடந்த வார 'சிஓஇ' ஏலத்­தில் 'பி' பிரிவு கார்­களுக்­கான கட்­ட­ணம் 22.9% குறைந்து $38,600 ஆனது. 2010ஆம் ஆண்டு ஜூலை மாதத்­திற்­குப் பிற்­பட்ட காலத்­தில் இது ஆகக் குறைந்த கட்­ட­ண­மா­கும். மேலும், 'ஏ' பிரிவு கார்­களுக்­கான 'சிஓஇ' கட்­ட­ணம் 9% குறைந்து $46,700 ஆனது. இருப்­பி­னும் 'பி' பிரிவு கார்­களுக்­கான 'சிஓஇ'ஐவிட இது அதிகம். பிப்­ர­வரி முதல் ஏப்ரல் மாதம் வரை­யி­லான காலாண்­டுக்கு கடந்த வாரம் நடந்த ஏலம் முத­லா­வ­தா­கும். இந்தக் காலாண்­டில், சென்ற காலாண்டை­விட கூடுதல் சிஓஇ ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும், அடுத்­து­வ­ரும் ஏலங்களில் 'சிஓஇ' கட்­ட­ணங்கள் உய­ர­லாம் என நிபு­ணர்­ கள் கருத்­துரைத்­துள்­ள­னர். அடுத்த சிஓஇ ஏலம் இம்­ மா­தம் மூன்றாம் வாரத்­தில் நடை­பெ­றும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!