வேற்றுமைகளைக் கடந்த காதல்

முஹம்­மது ஃபைரோஸ்

வேற்­றுமை­களைக் கடந்து காதலால் இணைந்த கே.எஸ்.எம் விஜ­ய­சே­க­ரன், கூ யென் லிங் தம்ப­தி­யர் இன்று சீனப் புத்­தாண்டை மகிழ்ச்­சி­யு­டன் வர­வேற்­கின்ற­னர். இரு­வ­ருக்­கும் இடையே நட்­பு­றவை வளர்க்க உதவி­யது உணவு. இரு­வ­ரும் அப்போது ஒரே இடத்­தில் பணி புரிந்­து­ கொண்­டி­ருந்த­னர். திருமதி கூ இளம் வய­தி­லி­ருந்தே சைவ உணவு வகை­களைத்­தான் விரும்பி உண்பார். குறிப்­பிட்ட பண்­டிகைக் காலங்களில் மட்டும் சைவ உணவு உண்ணும் திரு விஜ­ய­சே­க­ரன், வேலை­யி­டத்­தில் தரமான சைவ உணவு கிடைக்­கா­த­தால் வேலைக்கு வரும் முன்பு திருமதி கூவிடம் தமக்­குப் பிடித்­த­மான சைவ உணவு வகைகளை வாங்கி வரச் சொல்வார். "என்­னுடைய வேண்­டு­கோளை ஏற்று ஒவ்வொரு முறையும் அவர் உணவு வாங்கிக் கொடுத்­தது என்னை ஆச்­ச­ரி­யப்­பட வைத்தது," என்று கூறும் 39 வயது விஜ­ய­ சே­க­ரன், அவ­ருடைய சைவ உணவுப் பழக்­கம் தம்மைக் கவர்ந்த­தா­கக் கூறினார்.

அதே வேளையில், திருமதி கூவின் பணிவான, கனிவான நடத்தை­யும் திரு விஜ­ய­சே­க­ரனை வெகு­வா­கக் கவர்ந்தது. "நான் கலா­சா­ரத்தை அதிகம் பின்­பற்­று­ப­வன். என்னோடு சேர்ந்து ஒவ்வொரு படியை­யும் முன்­னெ­டுத்து வைக்கும் வாழ்க்கைத் துணை­வியைத் தேடிக் கொண்­டி­ருந்­தேன். அப்போது அவரோடு பழ­கி­ய­போது இவர்­தான் என்­னுடைய மறுபாதி என முடி­வெ­டுத்­தேன்," என்றார் விஜ­ய­சே­க­ரன். இனம், சமயம், மொழி போன்ற வேறு­பாடு­களை விட்­டு­விட்டு பண்­பு­ந­லன்களுக்கே முத­லி­டம் கொடுத்­த­னர் இத்தம்பதி. கிட்­டத்­தட்ட ஆறு ஆண்­டு­கள் பழகி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்­து­கொண்ட நிலையில், இரு­வ­ரும் திரு­ம­ணம் செய்­து­கொள்ள விரும்­பி­னர். திருமதி கூவின் பெற்றோர், குறிப்­பாக அவரது தாயார் எந்த­வொரு எதிர்­பார்ப்­பு­மின்றி திரு­ம­ணத்­திற்கு மன­பூர்­வ­மா­கச் சம்­ம­தம் தெரி­வித்­தார். "தமது வற்­பு­றுத்­த­லால் ஒரே இனத்­த­வரை திரு­ம­ணம் செய்­து­கொண்டு, பின்னர் மண வாழ்க்கை மகிழ்ச்­சி­யாக அமை­யா­ததை­விட வேறு இனம், சம­யத்தைச் சேர்ந்த­வ­ராக இருந்தா­லும் மன நிம்­ம­தி­யோடு நாங்கள் வாழ்­ந்தால் அதுவே சிறப்­பா­னது என்றும் என் தாயார் சொன்னார்," என்று நினை­வு­கூர்ந்தார் திருமதி கூ, 37.

பெற் றோ ருக்கு மகள் தாரிணி இரு மாண்ட ரின் ஆரஞ்சு பழங்களைக் கொடுக்க, மகளுக்கு விஜயசேகரன், கூ யென் லிங் தம்பதி 'ஹோங் பாவ்' உறையை வழங்குகின்றனர். படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!