‘சாலட்’ கீரைகளில் நெளிந்த சிலந்தி

சிட்னி: பேரங்காடியில் வாங்கிய 'சாலட்' கீரைப் பொட்டலத்தில் ராட்சச சிலந்தி ஒன்று நெளிந்ததைக் கண்டு ஆஸ் திரேலிய குடும்பத் தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உள்ளூர் பேரங்காடியை குறிப்பிட்டு சோ பெர்ரி என்பவர் ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார்: "இத்தாலிய 'சாலட்' பொட் டலத்தை வாங்கி வீட்டுக்கு வந்தோம். அந்தப் பொட்டலத் தை திறந்து பார்த்தால் அது எங்களை வரவேற்றது," இந்தத் தகவலுக்கு கீழே பதிவு செய்யப்பட்ட காணொளி படத்தில் சாலட் கீரைகளுக்கு இடையே ராட்சச சிலந்தி ஒன்று ஓடியது.

இந்தக் காணொளியை 6.8 மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் அதோடு 100,000 முறைக்கு மேல் பகிர்ந்து கொள்ளப்பட்டது. செல்வி பெர்ரி கேள்வி ஒன்றையும் எழுப்பியிருந்தார். 'சால்மெனல்லா' கிருமி காரணமாக பல நிறுவனங்களின் 'சாலட்' கீரைகள் மீட்டுக் கொண் டதற்கும் இந்தக் கண்டுபிடிப் புக்கும் தொடர்பு இருக்கிறதா," என்று அவர் கேட்டிருந்தார். கடந்த வியாழக்கிழமை ஆஸ் திரேலியாவில் சால்மெனல்லா கலப்படத்தால் உல்ஸ்வொர்த், கோல்ஸ் போன்ற பேரங்காடிகளி லிருந்து பல நிறுவனங்களின் 'சாலட்' பொட்டலங்கள் மீட்டுக் கொள்ளப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!