உரிம முறைகேடுகளால் துப்பாக்கிகள் பறிமுதல்

துப்பாகிகளின் உரிமம் தொடர்பான பிரச்சினைகளால் சிங்கப்பூர் 'கன் கிளப்', சிங்கப்பூர் 'ரைஃபிள் அசோசியேஷன்' ஆகிய இரு அமைப்புகளிடமிருந்து சிங்கப்பூர் போலிஸ் படை பல துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்துள்ளது. அவ்விரு அமைப்புகளின் ஆயுதக் கிடங்குகளில் சிங்கப்பூர் போலிஸ் படையின் போலிஸ் உரிம, சட்டப் பிரிவு நடத்திய கணக்குத் தணிக்கையில் துப்பாக்கிகளின் உரிமங்கள் தொடர்பான முறைகேடுகள் கண் டறியப்பட்டன. சிங்கப்பூர் போலிஸ் படை வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

போலிஸ் விசாரணை தொடர்கிறது என்றும் அறிக்கை குறிப்பிட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் 70க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அறியப்படுகிறது. இந்த துப்பாக்கிகள், மரணம் அடைந்த சங்க உறுப்பினர்கள், மன்றங்களை விட்டுச் சென்றவர் கள் அல்லது சிங்கப்பூரை விட்டுச் சென்றவர்கள் ஆகியோரின் துப்பாக்கிகள் என்றும் அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்றும் நம்பப்படுகிறது. தேசிய துப்பாக்கி சுடும் நிலையத்திற்கு வெளியே 'இன்று தேசிய குழு பயிற்சியைத் தவிர மற்ற அனைத்து நடவடிக்கை களுக்கும் நிலையம் மூடப்படும்' எனும் அறிவிப்பு சனிக்கிழமை நண்பகல் வைக்கப்பட்டிருந்தது.

சுவா சூ காங் ரோட்டில் உள்ள தேசிய துப்பாக்கி சுடும் மையம். ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!