சிரியா அகதிகளை துருக்கி ஏற்க ஒன்றியம் அழைப்பு

பெல்ஜியம்: போரில் தப்பி எல்லையில் சிக்கித் தவிக்கும் பல ஆயிரக்கணக்கான சிரிய அகதிகளை துருக்கி ஏற்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் வலியுறுத்தியிருக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஃபெடெரிகா மோகெரினி, சட்ட பூர்வமாக இல்லாவிட்டாலும் தார் மீக அடிப்படையில் ஏற்க கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். ஆனால் சிரியாவுக்குள்ளேயே அகதிகள் தற்காலிக இருப் பிடமும் உணவும் பெற்று வரு வதால் எல்லையைக் கடக்க அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று துருக்கி கூறுகிறது.

அலெப்போவில் பிரிவினை வாதிகளுக்கு எதிராக சிரியா அரசாங்கம் கடுமையாக போரிட்டு வரும் நிலையில் 35,000 பேர் அந்த இடத்திலிருந்து தப்பி வெளியேறியிருக்கின்ற னர். கடந்த நவம்பரில் துருக்கிய மண்ணில் உள்ள சிரிய அகதி களைப் பராமரிப்பதற்காக 3 பில்லியன் யூரோவை துருக்கிக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்தது. மோகெரினியின் வேண்டு கோளை ஐரோப்பிய ஒன்றியத்தின் இதர அதிகாரிகளும் எதிரொலித் தனர். துருக்கிய எல்லையில் நின்று கொண்டிருக்கும் மக்களின் புகைப்படங்களைப் பார்த்தால் அவர்களை உள்ளே அனுமதித்து மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்று நெதர் லாந்து வெளியுறவு அமைச்சர் பெர்ட் கோயன்டெர்ஸ் கூறினார். ஆனால் துருக்கியின் கிலிஸ் ஆளுநர் சுலைமைன் டாப்சிஸ், அந்த நடவடிக்கை தேவையற்றது என்று கூறினார். "எங்கள் கதவு மூடப்பட வில்லை. ஆனால் இத்தகைய மக்களை எல்லைகளுக்குள் அனுமதிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!