அரையிறுதிக்குள் நுழைந்த கேரள அணி

கொச்சி: இந்திய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு கேரளா பிளார்ஸ்டர்ஸ் குழு தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் கொச்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா வும் கவுகாத்தி குழுவும் மோதின. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் கவுகாத்தி அணியினரும் சமநிலை கண்டாலே அரையிறுதி வாய்ப்பு நிச்சயம் என்ற நிலையுடன் கேரளா வீரர்களும் ஏறத்தாழ 53,000 ரசிகர்களுக்கு முன்னால் களம் இறங்கினர். தொடக்கத்திலிருந்தே இரு அணி வீரர்களும் கோல் போடும் முனைப்புடன் இருந்தனர். ஆனால் முற்பாதியில் இரு குழுக்களும் கோல் ஏதும் போடவில்லை. பிற்பாதியில் நிலைமை கேரள வீரர்களுக்குச் சாதகமாக மாறியது. 66வது நிமிடத்தில் சக வீரர் முகம்மது ரஃபி அனுப்பிய பந்து கேரளாவின் நட்சத்திர வீரர் சி.கே. வினீத்திடம் சென்றது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பங்ளாதேஷ் தரப்பில் பந்தடிக்கும் சபிர் ரஹ்மான் (வலது). படம்: ஏஎஃப்பி

17 Sep 2019

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

ஆர்சனலின் இரண்டாவது கோலைப் போடும் பியா எமெரிக் ஒபமயாங். படம்: ராய்ட்டர்ஸ்

17 Sep 2019

இபிஎல்: வெற்றியை நழுவவிட்ட ஆர்சனல்

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

17 Sep 2019

‘அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’